கலகலக்க வைக்கும் செல்பி "புள்ளை"யார்
சென்னை: இதோ விநாயகர் சதுர்த்தி வந்து விட்டது. நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த முறையும் வழக்கம் போல விதம் விதமான பிள்ளையார் சிலைகள் மக்களை அசத்த களத்தில் குதித்துள்ளன.
பாகுபலி பிள்ளையார் இந்த ஆண்டின் ஸ்பெஷல் பிள்ளையாராக உருவெடுத்துள்ளார். பாகுபலி படத்தில் சிவலிங்கத்தை நாயகன் பிரபாஸ் தோளில் தூக்கிச் சுமந்து செல்வதைப் போல, விநாயகர் சிவலிங்கத்தைக் தூக்கி்ச ெசல்வது போல சிலை உருவாக்கியுள்ளனர்.
இதேபோல மேலும் பல வித்தியாசமான பிள்ளையார்களைச் சந்தையில் காண முடிகிறது.
சென்னையைப் பொறுத்தவரை கொருக்குப் பேட்டைதான் விநாயகர் சிலைகளுக்கு பிரபலமாகும். அங்குதான் விநாயகர் சிலை தயாரிப்பு ஆண்டுதோறும் களை கட்டியிருக்கும். இங்கிருந்து நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும், பிற ஊர்களுக்கும் கூட சிலைகள் போகின்றன.
Posted by அருண் வால்பையன் on Tuesday, September 15, 2015
இந்த முறையும் அங்கு சிலை தயாரிப்பு களை கட்டியுள்ளது. விதம் விதான பிள்ளையார்களை, குட்டி பிள்ளையார் முதல் பெரிய சைஸ் பிள்ளையார் வரை தயாரித்துக் குவித்து வருகிறார்கள்.
இந்த நிலையி்ல் பேஸ்புக்கில் ஒரு பிள்ளையாரைப் பார்க்க முடிந்தது. அதில் சிவன், பார்வதி ஆகியோருடன் பிள்ளையார் குடும்பத்தோடு காட்சி தருகிறார்.
பிள்ளையார் கையில் ஒரு செல்பி ஸ்டிக், அதை வைத்து செல்போனில் தனது குடும்பத்தோடு செல்பி எடுத்துக் கொள்கிறார் பிள்ளையார். இந்த சிலை தற்போதைய நாட்டு நடப்பை விளக்குவதாக அழகுற அமைந்துள்ளது.
எல்லோரும் செல்பி பிள்ளைகளாக இருக்கும்போது பிள்ளையாரும் செல்பி பிள்ளையாராக மாறக் கூடாதா என்ன.


Click it and Unblock the Notifications
