For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்கா குஷ்புவுக்கு அது தெரியாதாக்கும்!... கொக்கி போடும் விந்தியா!!

|

கரூர்: காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளை அழப்பதற்கு அடிக்கல் நாட்டியதே திமுக தான். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்தான் மீத்தேன் எரிவாயுத் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. குஷ்பு அக்காவுக்கு இது தெரியாதா என்று கேட்டுள்ளார் அதிமுக நடிகை விந்தியா.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது இப்படி குஷ்புவின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுத்தார் விந்தியா.

கரூர் திமுக வேட்பாளர் ம.சின்னசாமியை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் திரைப்பட நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது விவசாயிகள் நலனில் அ.தி.மு.க அரசு அக்கறை காட்டாவில்லை. விவசாயிகள் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பேசினார்.

இதற்குத்தான் இப்படிப் பதிலளித்தார் விந்தியா. கரூர் அதிமுக வேட்பாளர் மு. தம்பித்துரைக்கு ஆதராக பிரசாரம் மேற்கொண்ட நடிகை விந்தியா நேற்று இரவு ராமாகவுண்டனூர், கரூர் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த நடிகை விந்தியா பேட்டியளித்தார்.

குஷ்பு அக்கா...

குஷ்பு அக்கா...

அக்கா குஷ்பு விவசாயிகள் நலனில் அம்மா அரசு அக்கறை காட்டவில்லை என கூறியுள்ளார். விவசாய நலன்களை காக்காமல், விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் அளிப்பதற்காக தி.மு.க ஆட்சியில் கடந்த 2011 ல் ஜனவரி மாதம் மீத்தேன் வாயு திட்டத்தை தஞ்சாவூரில் கொண்டு வர கையழுத்திட்டவர்கள் அப்போதைய தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தான் என்றார்.

இது கூடவாக்கா தெரியாது உங்களுக்கு

இது கூடவாக்கா தெரியாது உங்களுக்கு

இது அக்கா குஷ்பு விற்கு தெரியாதா. அப்போது குஷ்பு தமிழகத்தில் தானே இருந்தார்.

காவிரியைப் பெற்றுத் தந்தவர்

காவிரியைப் பெற்றுத் தந்தவர்

கர்நாடகா அரசு குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் இருந்த போது உச்சநீதி மன்றத்தில் போராடி காவிரி நீரை பெற்று தந்தவர் தமிழக முதல்வர் ஆவார்.

மின்சாரத்தைத் தடுத்தது திமுக, காங்.

மின்சாரத்தைத் தடுத்தது திமுக, காங்.

மத்தியிலே ஆண்ட காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி வைத்து கொண்டு தமிழகத்திற்கு தொகுப்புப்படி மின்சாரத்தை விடாமல் தடுத்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க அரசு தான். இது குஷ்பு விற்கு தெரியாதா என்றார்.

தெரிஞ்சிட்டு வந்து பேசுக்கா....

தெரிஞ்சிட்டு வந்து பேசுக்கா....

பிரச்சாரத்தின் போது இவைகளை எல்லாம் தெரிந்து விட்டு குஷ்பு பேச வேண்டும் என்றார். இதை குஷ்பு விற்கு கலைஞர் முதலில் கற்றுதர வேண்டும்.

இங்குதான் குற்றம் குறைவு

இங்குதான் குற்றம் குறைவு

தேசிய குற்ற ஆவண காப்பகம் அதாவது நேஷ்னல் கிரைம் ரெக்கார்டு பீரோ கொடுத்த தகவலின் படி 2012- 2013 ல் பெண்களுக்கு எதிரான நடந்த குற்றங்கள் படி இந்தியா அளவில் தமிழகத்தில் தான் குறைவு.

பேசாம வீ்ட்டிலேயே இருக்கலாம் விஜயகாந்த்

பேசாம வீ்ட்டிலேயே இருக்கலாம் விஜயகாந்த்

விஜயகாந்த் பேசாமல் வீட்டிலே இருந்து விட்டால் தொண்டர்களாவது தேர்தல் பணிகளை பார்த்து விடுவார்கள்.

செம காமெடியன்

செம காமெடியன்

சினிமாவில் ஹிரோ, ஆனால் பிரச்சாரத்தில் காமெடியன் என்றார் விந்தியா.

செய்தியாளர்களுடன் ஒரு கிளிக்...

செய்தியாளர்களுடன் ஒரு கிளிக்...

பேட்டி முடிந்தவுடன் செய்தியாளர்களுடன் நடிகை விந்தியா புகைப்படம் எடுத்து கொண்டு விடைபெற்றார்.

English summary
ADMK actress Vindhya slammed DMK actress Khushbu for her comments on farmers in her Karur press meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X