சொந்த ஊருக்கு ஓட்டு போட போன அரசியல் தலைவர்கள்
சென்னை: வசிப்பது சென்னை என்றாலும் வாக்களிப்பது சொந்த ஊரில் என்ற பாலிசி வைத்திருக்கின்றனர் சில அரசியல் தலைவர்கள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டாக்டர் ராமதாஸ், நிதியமைச்சர் பா.சிதம்பரம் போன்ற தலைவர்கள் சொந்த ஊருக்குப் போய் வாக்களித்த தலைவர்கள் வரிசையில் வருகின்றனர்.

கண்டமனூர் போன ப.சி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் சொந்த ஊர். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொகுதியில் சுற்றி வந்த ப.சிதம்பரம், தனது மகன், மனைவி, மருமகள் சகிதமாக கண்டனூர் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

கலிங்கபட்டி வைகோ
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கபட்டிதான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இம்முறை தனது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் தனது சின்னமான பம்பரத்திற்கு ஓட்டு போட்டதில் வைகோவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நாகர்கோவில் பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக மாநில தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான நாகர்கோவிலில் தனக்காக வாக்களித்தார்.

திண்டிவனம் ராமதாஸ்
தைலாபுரம் தோட்டத்தில் வசிக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது குடும்பம் சகிதமாக திண்டிவனத்தில் வாக்களித்தார்.

பெரம்பலூரில் ஆ.ராசா
நீலகிரி தொகுதியில் போட்டியிட்டாலும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் வேலூரில் உள்ளது. அங்கு சென்று ஊர்மக்களோடு வாக்களித்தார்.

ஈரோட்டில் ஈவிகேஎஸ்
திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், தன் மனைவி வரலட்சுமியுடன், சொந்த ஊரான ஈரோடு போய் அங்குள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

அங்கனூர் போன திருமா..
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமம்தான் சொந்த ஊர். அங்கே போய் ஓட்டு போட்டார் திருமாவளவன்.

ஈரோட்டில் ஈவிகேஎஸ்
திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், தன் மனைவி வரலட்சுமியுடன், சொந்த ஊரான ஈரோடு போய் அங்குள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

பெரியகுளத்தில் ஓ.பி.எஸ்
தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு போய் வாக்களித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications