For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்னதானம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்: விருத்தாச்சலம் அருகே பரபரப்பு

அன்னதானம் சாப்பிட்டதால் 150 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்னதானம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்-வீடியோ

    விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அருகே வி.சாத்தமங்கலம் கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறு உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சாத்தமங்கலம் பகுதி மாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் நேற்றிரவு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே ஒவ்வொருவராக மயக்கடைந்து கீழே விழ தொடங்கினர்.

    Virudhachalam people fell ill after eating free meal

    பலருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் விருத்தாச்சலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    The festival of Sathamangalam is celebrated in the Mariamman temple in Vriddhachalam. All the devotees who participated were blessed with last night. Many people who ate it felt vomiting and dizziness because of free-meal. More than 150 victims have been admitted to the Virudhachalam hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X