நடிகர் சங்க தேர்தல்: வாக்குச்சவாடிக்குள் விஷால் மீது தாக்குதல்.. சரத் உதவியாளர் தாக்கியதாக தகவல்
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விஷால் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை சரத்குமாரின் உதவியாளராக கூறப்படும் கிச்சா என்பவர் தாக்கியதாக செய்திகள் வருகின்றன.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வந்தது.

இந்நிலையில், பகல் 12 மணியளவில் திடீரென வாக்குச்சாவடி அருகே சலசலப்பு ஏற்பட்டது. நடிகர், நடிகைகளும் வாக்குச்சாவடியை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், செய்தியாளர்களை உள்ளே விட போலீசார் அனுமதிக்கவில்லை.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், ‘விஷால் தாக்கப்பட்டதாகவும், சரத் அணிக்கும், விஷால் அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரச்சினைக்குக் காரணமாக கூறப்படுவதாவது:
நடிகை சங்கீதா வாக்களிக்க வந்தபோது அவரை சரத்குமார் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஷால் தட்டிக் கேட்டதாகவும், அப்போது சரத்குமாரின் அருகே இருந்த அவரது உதவியாளரான கிச்சா என்பவர் தாக்கி விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தாக்குதலில் விஷால் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் அவரே வெளியேறி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications