நட்சத்திர கிரிக்கெட்: ரஜினி, கமல் பங்கேற்பதாக விஷால் தகவல் !
சென்னை: தென் இந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான நிதிக்காக ரஜினி, கமல் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகம் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது, கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது..
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்ட முதற்கட்ட நிதி திரட்ட வரும் ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் ரஜினி, கமல் உள்ளிட்ட ஒட்டு மொத்த திரையுலகம் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் குழுக்கள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் சங்கத்தின் பழைய கணக்கு வழக்குகள் இன்னும் சரிவர ஒப்படைக்கப்படவில்லை. இரண்டு வருட கணக்குகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஷால் கூறினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications