அடுத்தகட்ட அரசியல் நகர்வு.. விஷால் அதிரடி அறிவிப்பு
Recommended Video

சென்னை: விரைவில் அடுத்தகட்ட அரசியல் நகர்வை அறிவிப்பேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்புமனு நீண்ட இழுபறிக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.
இரவு வரை நீடித்த இந்த குழப்பத்தால் தேர்தல் அதிகாரி மீது தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விஷால் புகார் அளித்து, தன்னுடைய வேட்புமனுவை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார் விஷால்.

போட்டியிடாத விஷால்
ஆனால் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது என்று லக்கானி கூறிவிட்டார். இதனால் ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட முடியவில்லை. விஷால் வேட்புமனுவை ஏற்க கூடாது என்று ஆளும் அதிமுகதான் பிடிவாதம் காட்டியிருந்தது.

நன்றி தெரிவிப்பு
இந்த நிலையில், இன்று விஷால் கூறியுள்ளதாவது: எனது போராட்டத்தில் துணை நின்ற ரசிகர்கள், பொதுமக்கள், தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆதிக்க சக்திகள்
ஆதிக்க சக்தியினால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் என்னுடைய மக்கள் பணி தொடரும். இவ்வாறு விஷால் கூறியுள்ளார். ஆர்.கே.நகரில் ஒரு சுயேட்சைக்கு ஆதரவு அளித்து அவரை வெற்றி பெறச் செய்ய உள்ளதாக ஏற்கனவே இவர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

கன்னியாகுமரி பிரச்சினை முக்கியம்
இதுகுறித்து விஷால் கூறுகையில், ஆர்கேநகர் இடைத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என இதுவரை முடிவெடுக்கவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலைவிட குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனையே முக்கியமானது. அவர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications