டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலைக்கு ஜெ.வின் பதில் என்ன? கேட்கிறார் கருணாநிதி
சென்னை: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலைக்கு, காவல்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள முதல்வரின் பதில் என்ன? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலக் காவல் துறை மீது நம்பிக்கை இல்லை" என்று தலைமை நீதிபதி கூறியிருப்பதற்கு பதில் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு காவல் துறைக்கு, அதன் தகுதி, திறமை, வேகம், புலனாய்வு நுணுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் "ஸ்காட்லாண்டு" காவல் துறைக்கு இணையான மதிப்பும், புகழும் ஒரு காலத்தில் உண்டு. அந்தப் பாராட்டெல்லாம் தற்போது பொய்யாய், பழங்கனவாய் ஆகி விட்டது. பரபரப்பூட்டிய மிக முக்கியமான கொலைகளில் கூட, குற்றவாளிகள் மூன்று நான்கு ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்படவே இல்லை.
செம்மரக் கடத்தல் வழக்கில் காவல் துறை அதிகாரி ஒருவரே முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆளுங்கட்சியினருடனான அவருடைய செல்வாக்கின் காரணமாக அந்த வழக்கு குப்பைக் கூடைக்குப் போய் விட்டது.
ஒரு மூத்த அதிகாரி தற்கொலையே செய்து கொண்டு மாண்டார். அந்த வழக்கில் அமைச்சர் ஒருவரே பதவியைப் பறிகொடுத்து சிறைக்குச் சென்றார். பின்னர் அந்த வழக்கும் எங்கிருக்கிறது என்று தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, ஏன் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரே பட்டப் பகலில், வெட்ட வெளியில் கொலை செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் கண்டு பிடிக்கப்படவில்லை.
திருச்செங்கோட்டில் பணியாற்றி வந்த 27 வயதான விஷ்ணு பிரியா என்ற பெண் டி.எஸ்.பி., பணியில் சேர்ந்த ஏழு மாதக் காலத்திலேயே, குரூப் 1 தேர்வில், காவல் துறையைத் தவறாகத் தேர்ந்தெடுத்து விட்டேன் என்றும், பணியில் பயங்கரமான நெருக்கடிகளால் ஏற்படும் மன உளைச்சல்களைத் தாங்க முடியவில்லை என்றும், அதனால் தற்கொலை முடிவை நாடுவதாகவும் எழுதி வைத்து விட்டு நேற்றைய தினம் வேறு சில அதிகாரிகள் செய்ததைப் போல, தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
காவல் துறை மீது இதுவரை இல்லாத இப்படிப்பட்ட கடுங் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக அணி வகுத்துவந்து கொண்டிக்கும் நேரத்தில், அதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மாநிலக் காவல் துறை மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார் என்று அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
இதற்கெல்லாம் காவல்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள முதல்வரின் பதில் என்ன? பேரவையில் 110வது விதியின் கீழ் அதைச் செய்யப் போகிறோம், இதைச் செய்யப் போகிறோம் என்று வானத்தை வில்லாய் வளைக்கப் போகிறோம்; மணலைக் கயிறாய்த் திரிக்கப் போகிறோம் என்பதைப் போன்ற வெற்று அறிவிப்புகள் மட்டும் தானா?" என்று கருணாநிதி தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications