For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஎஸ்பி விஷ்ணுபிரியா... ராம்குமார் மறைவு தினம்... நினைவு கூர்ந்த நெட்டிசன்ஸ்கள்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணமும், ராம்குமாரின் மரணமும் இன்றைக்கு நெட்டிசன்களிடையே பேசுபொருளாக உள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிலரது மரணங்கள் மறக்கப்பட்டு விடும். சிலரின் மரணம் ஆண்டு தோறும் நினைவு கூறப்படும். சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் மரணம் இன்றைக்கு நெட்டிசன்களால் நினைவு கூறப்படுகிறது.

இதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் மரணமும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

சுவாதி கொலையும் ராம்குமார் கைதும்

சுவாதி கொலையும் ராம்குமார் கைதும்

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தனியார் நிறுவன ஐடி ஊழியர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒருவார தேடுதல் வேட்டைக்குப் பின்னர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த ராம்குமார்,24 என்ற இளைஞரை கடந்த ஜூலை 1ஆம் தேதி நள்ளிரவில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கரண்ட் கம்பி கடித்து மரணம்

கரண்ட் கம்பி கடித்து மரணம்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதியன்று அங்கிருந்த மின்சார பெட்டியில் இருந்த வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. ராம்குமார் மரணம் பற்றி அப்போதே சர்ச்சை எழுந்தது. ராம்குமார் மரணமடைந்து ஓராண்டு

தினந்தோறும் அஞ்சலி


இன்றோடு ராம்குமார் இறந்து ஓராண்டு ஆகிறது. டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியாவுக்கு இது இரண்டாம் ஆண்டு நினைவு தினம்.
இப்படி அன்றாடம் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தியே நம் காலங்கள் போகின்ற என்பது வேதனையான வெட்கப்படவேண்டிய விஷயம். ஆனாலும் என்ன செய்ய? நினைவஞ்சலிகள் மூலமே நாம் வஞ்சிக்கப்பட்டதை மறந்துவிடலாகாது என்பதை காலம் உணர்த்துகிறது. பல ஆண்டுகள் கழித்து ராம்குமாரும் விஷ்ணுப்ரியாவும் தற்கொலை செய்துகொண்டவர்களாகவே வரலாற்றில் நிலைத்துவிடுவார்களோ என்றுதான் அச்சமாக இருக்கிறது. ஏனெனில் நம் காலத்துக்குப் பின் எழுதப்பட்ட கோப்புகளில் உள்ளவையே வரலாறு என்று தனது ஃபேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கவின்மலர்.

கத்துக்கணும் ஆபிசர்ஸ்

ராம்குமார் கைது முதல் கரண்ட் கம்பியை கடிச்சு மரணமடைந்தது வரை என்னா ட்விஸ்ட்... இதை வச்சு 1000 படத்துக்கு தை எழுதலாம் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

தொடர் கொலைகள்

2015ல் விஷ்ணுபிரியா தற்கொலை, 2016ல் ராம்குமார் தற்கொலை, 2017ல் செப்டம்பர் 18ல் ஜனநாயகப் படுகொலை என்று கூறி பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா

டிஎஸ்பி விஷ்ணுபிரியா

விஷ்ணுபிரியா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் எவ்வித இழப்பீடும் இதுவரை வழங்கவில்லை என்று அவரது தந்தை ரவி தெரிவித்துள்ளார். அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என ரவி கோரிக்கை விடுத்துள்ளார். அரசு செவி சாய்க்குமா?

English summary
DSP Vishnupriya and Ramkumar Death day twitter and face book post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X