விஷ்ணு பிரியா தற்கொலைக்கு காரணமான ஆதாரத்தை நாளை வெளியிடுவேன்: வாட்ஸ் அப்பில் மிரட்டும் யுவராஜ்
நாமக்கல்: டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக தன்னிடம் செல்போனில் பேசியதையும், அவரது தற்கொலைக்கான ஆதாரத்தையும் நாளை வெளியிடப் போவதாக தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் யுவராஜ் கூறியுள்ளது வாட்ஸ்-அப்பில் வெளியாகியுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், விஷ்ணு பிரியா தற்கொலை குறித்தும், அது தொடர்பாக நடைபெறும் விசாரணை பற்றியும் யுவராஜ், விமர்சித்து பேசிய பேச்சு வாட்ஸ் அப் மூலம் இரு முறை வெளியானது.

இந்த நிலையில் விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரத்தை நாளைய தினம் ( ஞாயிறு) காலை 11 மணிக்கு வெளியிடுவேன் என்று மீண்டும் வாட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், விஷ்ணு பிரியாவின் தற்கொலை பற்றி மூன்று கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நான் வெளியிடப்போகும் தகவல் முக்கிய ஆதரமாக இருக்கும்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக என்னிடம் டி.எஸ்.பி விஷ்ணு பிரியா பேசிய ஆடியோ ஆதாரம் மிகமுக்கியமானது. உயரதிகாரிகள் எந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்து அவரை தற்கொலைக்கு தள்ளினார்கள் என்பது ஆடியோ ஆதாரம் உள்ளது. இதனை இப்போது வெளியிடுவதற்கான சரியான நேரம் வந்துள்ளதாக கருதுகிறேன்.
தற்கொலை தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி, நாமக்கல் எஸ்.பி, எடி.எஸ்.பி ஆகியோர் பொய்யான தகவல்களை கூறிவருகின்றனர் முத்துக்குமாரசாமி தற்கொலையில் எப்படி ஆதாரம் கிடைத்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதேபோல டி.எஸ்.பி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை காலை 11 மணிக்கு உண்மையான ஆதாரத்தை ஊடகங்களில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் யுவராஜ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications