ரூ.40 செலுத்தினால் வண்ண வாக்காளர் அட்டை வீடு தேடி வரும்... தேர்தல் ஆணையம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வாக்காளர் அடையாள அட்டையை தவற விட்டவர்கள் ரூ.40 செலுத்தினால் வீடு தேடி வரும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு மே 16-ந் தேதி்யும், வாக்கு எண்ணிக்கை மே 19-ந் தேதியும் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்க்கும் பணி அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாக்காளர் தேர்தலில் ஓட்டு போட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்காக அனைத்து தாலுகாக்கள், ஆட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் சேவையை மையத்தை திறக்க தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Voter ID will get Rs.40

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையத்தை ஆட்சியர் திறந்து பேசுகையில், ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டார அலுவலகங்களிலும் வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையை அட்டையை தொலைத்தவர்கள் இந்த மையங்களில் ரூ.25 செலுத்தி விண்ணப்பத்தில் அவர்களுக்கு 15 நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும் ரூ.40 செலுத்தினால் கூரியர் மூலம் வண்ண வாக்காளர் அடையாள அட்டை அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல், முகவரி மாற்றம் ஆகிய விண்ணப்பங்களும் பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும்.

வாக்காளர்கள் தங்களது வாக்கு எந்த பகுதியில் உள்ள மையத்தில் உள்ளது என்பதையும் இந்த மையங்களில தெரிந்து கொள்ளலாம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+