குடியரசுத் தலைவர் தேர்தல்: ஓட்டுப்பெட்டி இன்று சென்னை வருகை!
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டி இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது.
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டி இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவரை செய்வதற்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் சார்பில் பிரதீபா பாட்டீலும் போட்டியிடுகின்றனர். இதற்காக ஆதரவு கட்சிகளுடன் அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப் பெட்டி, விமானம் மூலம், இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது. ஓட்டுப் பெட்டியை கொண்டு வருவதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து, தலா, மூன்று தேர்தல் அதிகாரிகள், நேற்று காலை டில்லி சென்றனர். அவர்கள், இன்று இரவு ஓட்டுப் பெட்டியை, சென்னை கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications