பலத்த பாதுகாப்புக்கு இடையே ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள்!
ஆர்.கே. நகரில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே. நகரில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்குப் பிறகு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் துணை கம்பெனி ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications