சென்னைவாசிகளுக்கு உதவ விரும்புகிறீ்ர்களா?: அப்படினா இதை இப்பவே செய்யுங்க
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் நடிகர் சித்தார்த்தின் அறக்கட்டளைக்கு பணம் அனுப்பி வைக்கலாம்.
சென்னையில் வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் தங்கியுள்ளனர். நடிகர் சித்தார்த்தின் வீட்டிலும் வெள்ளம் புகுந்துள்ளது. ஆனால் அவர் அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவி செய்து வருகிறார்.
திங்கட்கிழமையில் இருந்து அவர் பம்பரமாய் சுழன்று மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
|
நிதியுதவி
சென்னை மக்களுக்கு உதவ விரும்புவோர் நடிகர் சித்தார்த்தின் அறக்கட்டளைக்கு நம்பி பணம் அனுப்பி வைக்கலாம். அறக்கட்டளையின் வங்கி விபரத்தை சித்தார்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏன் கொடுக்கணும்?
எத்தனையோ பேர் இருக்கையில் சித்தார்த்தின் அறக்கட்டளைக்கு ஏன் உதவ வேண்டும் என்று நினைக்கிறீர்களா? காரணம் உள்ளது, மழை கொட்டியபோதிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போதிலும் சித்தார்த் பல தன்னார்வலர்களை திரட்டி நகரில் சிக்கிய மக்களை தொடர்ந்து மீட்டு வருகிறார்.

உணவு
மழை பெய்கிறது, வெள்ளமாக கிடக்கின்றது என்று கூறி வீட்டில் இருக்காமல் அவர் பலரை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து பொட்டலங்கள் போட்டு தன்னார்வலர்களுடன் சேர்ந்து தெருத் தெருவாக வினியோகித்து வருகிறார்.

உதவி
யாராவது வெள்ளத்தில் சிக்கி சித்தார்த்திடம் உதவி கேட்டால் அடுத்த சில நிமிடங்களில் வாகனத்திற்கு ஏற்பாடு செய்து அவர்களை காப்பாற்றி வருகிறார். சித்தார்த்துடன் சேர்ந்து ஆர்.ஜே. பாலாஜியும் உதவி வருகிறார்.

செய்யலாம் தானே
இந்த இக்கட்டான நேரத்தில் தானாக முன்வந்து மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்யும் சித்தார்த்துக்கு உதவுவதில் தவறு இல்லை. அவர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க, அவர்களுக்கு உணவு வழங்க பணம் தேவைப்படுகிறது. அவருக்கு பண உதவி செய்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்களேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications