பழையபடி 'கர்ஜிக்க' வேண்டும்.. குரல் வளம் வேண்டி ஓசைநாயகி அம்மன் கோயிலில் விஜயகாந்த் சிறப்பு வழிபாடு
Recommended Video

சென்னை: தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது பழைய குரல் வளம் வேண்டி சீர்காழியில் குடும்பத்தோடு வழிபாடு நடத்தினார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ளது பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் ஆலயம். இங்கு குரல் பாதிப்பு உள்ளோர் மனமுருக வணங்கினால், அந்த பாதிப்பு நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையுள்ளது. குறிப்பாக இங்கு வழங்கப்படும் தேன் பிரசாதத்தில் மகத்துவம் உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினரோடு ஓசைநாயகி அம்மன் ஆலயத்தில், வழிபாடு நடத்தினார். குரல் வளம் வேண்டி அவர் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு விஜயகாந்த், தேன் பிரசாதம் சாப்பிட்டார்.
முன்னதாக கோவில் சார்பாக பரிவட்டம் கட்டி அவருக்கு மரியாதை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களில் மிக நீளமான வசனங்களையும் உச்ச ஸ்தாபியில் பேசி, இவரது டயலாக்குகளுக்காகவே தனி ரசிகர்களை சம்பாதித்தவர் விஜயகாந்த். அரசியலிலும் இவரது பேச்சு ஆளும் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த பல மாதங்களாகவே, விஜயகாந்த் தொண்டை பிரச்சினையால் அவதிப்பட்டு, பழையமாதிரி பேச முடியாமல் கஷ்டப்படுகிறார்.
ஒருபக்கம் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டாலும், மறுபக்கம், ஆன்மீக வழியில், தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியிலும் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications