ஜெ.வுக்கு தந்த உணவே விஷமானதா? மோடி எச்சரிக்கையை மறைமுகமாக உறுதி செய்கிறது அப்பல்லோ
ஜெயலலிதாவுக்கு தந்த மருந்துகளுக்கு எதிரான உணவுதான் விஷமாகிப் போனது என்பதை மறைமுகமாக அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை உறுதி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை: ஜெயலலிதாவுக்கு தரப்படும் உணவு விஷமாகிவிடும் அபாயம் இருக்கிறது என குஜராத் முதல்வராக இருந்த மோடி 6 எச்சரித்ததைத்தான் அப்பல்லோ மருத்துவமனையின் ரிப்போர்ட் மறைமுகமாக சுட்டிக்காட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது ஜெயலலிதாவின் உடல்நலனைப் பாதுகாக்க குஜராத்தில் இருந்து ஒரு நர்ஸை மோடி போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் போயஸ் கார்டனை ஆக்கிரமிருந்தவர்கள் அந்த நர்ஸை தொடக்கம் முதலே விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். ஒருகட்டத்தில் அவரால் தாக்குப் பிடிக்காமல் குஜராத்துக்குத் திரும்பி போய்விட்டார்.

உணவே நாளை விஷமாகும்..
அங்கு முதல்வராக இருந்த மோடியிடம், ஜெயலலிதாவுக்கு தரப்படும் மருந்துகள் சரியானதாக இருக்கிறது; ஆனால் அதற்கேற்ப உணவுகள் திட்டமிட்டே தரப்படுவதில்லை; எடுக்கப்படும் மருந்துகளுக்கு ஏற்ப உணவுகளைத் தர வேண்டும்; ஆனால் தொடர்ந்து வேண்டுமென்றே மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படும் வகையிலான உணவுகளே தரப்படுகிறது என அந்த நர்ஸ் விவரித்திருக்கிறார். இப்படியான உணவு நாளை விஷமாகி உடல்நலனை கடுமையாக பாதிக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஜெ விசாரணை
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மோடி உடனே ஜெயலலிதாவிடம் இது தொடர்பாக விரிவாக விவரித்து எச்சரிக்கை செய்திருந்தார். இது தொடர்பாக போயஸ் கார்டனில் கடுமையாக நடந்து கொண்டார் ஜெயலலிதா. அத்துடன் நிற்காமல் தமக்கு நம்பிக்கையான உளவுத்துறை மூலமாக தம்மை சுற்றி என்ன நடக்கிறது என கண்காணிக்க சொன்னார்.

விரட்டியடிப்பு
அப்போது ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட தகவல்கள், மோடியின் எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது. இதனால்தான் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக போயஸ் கார்டனை ஆக்கிரமித்திருந்த 40-க்கும் மேற்பட்டோரை விரட்டியடித்தார் ஜெயலலிதா. அதேபோல் இந்த 40-க்கும் மேற்பட்ட கும்பலை ஆட்டுவித்த நபர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார்.

விசாரணை நடத்தினால்...
மேலும் தமக்கு எதிரான சதிகாரர்கள் யாரென அடையாளம் கண்டு அவர்களை ஓட ஓட விரட்டி சிறையிலடைத்தார் ஜெயலலிதா. இதன் தொடர்ச்சியாகவே சசிகலா மட்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மீண்டும் போயஸ் கார்டனுக்குள் வந்தார்; தற்போது அப்பல்லோ அறிக்கை ஜெயலலிதாவுக்கு கடந்த தரப்பட்ட மருந்துகளே பிரச்சனைக்கு காரணம் என்கிறது. ஆகையால் கடந்த மருந்துகள், அதற்கான உணவுகள் குறித்து உரிய விசாரணை நடத்தினால் எல்லா உண்மையும் அம்பலத்துக்கு வரும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications