காஞ்ஜரிங்-2 திகில்... தியேட்டரில் படம் பார்த்த முதியவர் மரணம்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள தியேட்டரில் காஞ்ஜரிங்-2 பேய் படம் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள தியேட்டர் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த காஞ்ஜரிங்-2 என்ற ஆங்கில பேய் படம் அந்த தியேட்டரில் நேற்று மாலை 6.30 மணி காட்சியில் ஒளிபரப்பப் பட்டுள்ளது

Watching Conjuring 2, One died in Tiruvannamalai

இது திகில் நிறைந்த படம் என்பதால் பேய்களும், பிணங்களும் அதிகம் காட்டப்படும் இப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராம்மோகன் (68) என்பவரும் தியேட்டரில் காஞ்ஜரிங்-2 படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், படத்தின் காட்சியை பார்த்ததுக் கொண்டிருந்த அவர், திடீரென அலறி கத்தியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ராம்மோகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாரர்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+