கிடுகிடுவென குறையும் பாபநாசம் அணை நீர் மட்டம்.. குடிநீர் தட்டுப்பாடு வருமா... நெல்லை மக்கள் அச்சம்
நெல்லை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் நெல்லை, தூத்துக்குடியில் குடிநீர் தட்டுபாடு அபாயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு பாபநாசம் அணையைதான் மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இந்த அணையின் மூலம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான நெல் சாகுபடியும், தென் மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ சாகுபடியும் நடக்கும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் நெல்லையில் அதிக அளவில் தண்ணீர் கிடைக்கிறது. கடந்த வடகிழக்கு பருவமழையின் போது மழை நன்றாக பெய்ததால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நிரம்பி வழிந்தன.
ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழையும் பெய்யும். இதன் மூலம் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த முறை கார் சாகுபடிக்கு ஜூன் மாதம் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், தென் மேற்கு பருவமழை சரியான அளவில் பெய்யாமல் ஏமாற்றி வி்ட்டதால் கார் பருவ சாகுபடி இல்லாமல் பயிர்கள் கருகி விட்டன.
இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 28.20 அடியாக குறைந்து விட்டது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 36 டவுண் பஞ்சாயத்துகள், 425 கிராம பஞ்சாயத்துகள், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, 2 நகராட்சிகள், 19 டவுண் பஞ்சாய்ததுகள், 408 கிராம பஞ்சாயத்துகள் அனைத்திற்கும் பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மூலமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் தாமிரபரணி தணாணீர் செல்கிறது.
இதற்காக ஆயிரக்கணக்கான குடிநீர் உறை கிணறுகள் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பாபநாசம் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் இன்னும் 10 நாட்களுக்கு அணையில் தண்ணீர் திறக்கப்படுமா என சந்தேகமாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications