குற்றாலத்தில் கனமழை பெய்ததால் அருவிகளில் வெள்ளம் – குளிக்கத் தடை!
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால சீசன் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் வாரத்தில் சீசன் முடிவுக்கு வந்துவிடும்.
ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் முடியும் தருவாயில் தற்போது பலத்த மழை பெய்துவருகிறது. நேற்றுமுன்தினம் முதலே குற்றாலத்தில் மழை பெய்தது.

நேற்று முதல் விடாமல் குற்றாலம் வனப்பகுதியில் பெய்துவரும் பலத்த மழையினால் மெயின்அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருவிகளில் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.தண்ணீரும் செம்மண் கலந்த நிறத்திலேயே வந்தது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் இன்னும் சில தினங்களுக்கு குற்றாலத்தில் இதே சீசன் தொடர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications