மேட்டூர் அணையில் மளமளவென சரியும் நீர்மட்டம்… கவலையில் டெல்டா விவசாயிகள்
மேட்டூர்: கர்நாடகாவில் பருவமழை குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த, 12 நாட்களில், 10 அடி சரிந்துள்ளது, காவிரி டெல்டா விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தீவிரம் அடைந்த பருவமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 5,512 கனஅடியாக அதிகரித்தது. எனினும், நீர்வரத்தை விட, வெளியேற்றம் கூடுதலாக இருப்பதால், நேற்று நீர்மட்டம், 83.240 அடியாகவும், நீர் இருப்பு, 45.262 டி.எம்.சி.,யாக சரிந்தது. நீர்வரத்து சரிவால் கடந்த, 12 நாட்களில், 10 அடியும், நீர் இருப்பு, 11 டி.எம்.சி.,யும் குறைந்துள்ளது. காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர் மட்டம் 81.45 அடியாகவும் இருந்தது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,370 கன அடியாக இருந்தது தற்போது அணையில் நீர் இருப்பு 43.41 டி.எம்.சி.யாக உள்ளது.

கடந்த 28ம் தேதி, 93.560 அடியாகவும், நீர் இருப்பு, 56.958 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 15,000 கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து வினாடிக்கு, 3,500 கனஅடிக்கும் கீழே குறைந்த நிலையில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
ஒகேனக்கல் கீழ்பகுதியில் காவிரியுடன், சின்னாறு, பாலாறு, தொப்பையாறு, நாகாவதி என, நான்கு துணையாறுகள் கலக்கிறது. இதில், காவிரியாற்றை தவிர மற்ற ஆறுகள் நீர்வரத்து இன்றி வறண்டு போனது. இதுவும் மேட்டூர் அணை நீர்வரத்து சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
குடிநீர் தேவை மற்றும் மீன் வளத்திற்காக அணையில் 10 டி.எம்.சி. நீர் இருப்பு வைத்திருக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி மீதமுள்ள நீரை 33 நாட்கள் மட்டுமே திறந்து விட முடியும். இதனால் நீர் திறப்பு காலமான ஜனவரி 28ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications