சரியும் நீர்மட்டம் - திகிலில் பொதுமக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்துக்கு குடிநீர் தேவைக்கான அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் குடிநீர் பஞ்சம் ஏற்படுமோ என்ற திகிலில் பொதுமக்கள் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில ஆணடுகளாக சீரான மழை இல்லை. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆறுதல் அளிக்கும வகையில் ஓரளவுக்கு பெய்தது.
பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு போன்ற அணைகளில் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இந்த தண்ணீரை வைத்து நெல் சாகுபடியும நடந்து முடிந்தது. ஆனால் கடந்த 5 மாதங்களாக நெல்லை மாவட்டத்தில் மழை இல்லை. கடும் வெயில் கொளுத்துகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கி விட்டது.

அணைகளில் இருந்து குடிநீர் மற்றும் தண்ணீர் தேவைக்காக நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பிரதான அணைகளில் தினமும் 1 அடி வீதம் குறைந்து வருகிறது.
தற்போதைய நிலையில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 35.55 அடியாக உள்ளது. இதனால் அது தற்போது குட்டை போல் காட்சியளிக்கிறது. அணையின் நீர்மட்டம் 30 அடிக்கு கீழ் செல்லும் போது அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்படும்.
இது போல் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 65.33 அடியில் இருந்து 64.97 அடியாக குறைந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 48.29 அடியில் இருந்து 47.57 அடியாக குறைந்து விட்டது. 52 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி நீர் மட்டுமே உள்ளது.
132.2 அடி உள்ள அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 18.25 அடியாக உள்ளது. அடிக்கடி நிரம்பும் குண்டாறு அணையின் நீர்மட்டம் 16.43 அடியாக உள்ளது. கடனா, ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டமும் பரிதாபமாக உள்ளன.
50 அடி கொள்ளளவு கொண்ட பசசையாறு அணையின் நீர்மட்டம் சுத்தமாக வறண்டு விட்டது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வறட்சி தலை தூக்க துவங்கியுள்ளது. இதனால் புதிதாக பேர்வெல் போடும் பணி பல இடங்களில் நடந்து வருகிறது. இநத காரணத்தால் குடிநீர் பஞ்சம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications