For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெள்ள நீர்... கோவை எக்ஸ்பிரஸ் ரயில் லேட்!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையை மிரட்டிய மழை: குளமான சாலைகள்...ஸ்தம்பித்த வாகனங்கள்- வீடியோ

    சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நேற்று முதல் சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. மழை நீர் வெளியேற வழியில்லாததால் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ளது.

     Water logged in Chennai Central railway station

    இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதையடுத்து ரயில்கள் பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் கோவை எக்ஸ்பிரஸ்ஸும் செல்ல வழியின்றி நின்றது. இதையடுத்து ஊழியர்கள் மழைநீரை மின் மோட்டார் மூலம் அகற்றினர்.

    இதையடுத்து தண்ணீர் வெளியேறிய நிலையில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக ரயிலின் வேகத்தை குறைத்து இயக்க ஓட்டுநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    English summary
    Water logging around tracks in Chennai Central Railway station. Officials has made arrangements to outlet the water and Coimbatore express departures late.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X