2 வாரமாகியும் வடியாத தண்ணீர்... கண்டுகொள்ளாத அரசு... சாலை மறியலில் குதித்த விருகம்பாக்கம் மக்கள்!
சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியில் 15 நாட்களாக தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இம்மாத தொடக்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் பல இடங்களில் தண்ணீர் வடிந்து இயல்பு நிலைமை திரும்பி வருகிறது. ஆனால், விருகம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னமும் மழை நீர் தேங்கி நிற்கிறது.

அதனை அகற்ற அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் தேங்கியதால், கடந்த 15 நாட்களாக பரபரப்பான ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாறியது. வடபழனியில் இருந்து போரூர் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது என்றும், தண்ணிர் தேங்கியிருப்பதால் இருசக்கர வாகனம், கார் போன்றவை பழுதாகிறது என்றும் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டினர்.
சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, தண்ணீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications