சென்னை மக்களின் தாகம் தீர்க்க கிருஷ்ணா நதி தண்ணீர் திறப்பு
சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்த வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள விஜயவாடா மற்றும் கர்னூல் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து கடந்த வாரம் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது கண்டலேறு அணைக்கு வர தொடங்கி உள்ளது.

இதனால் தமிழக அதிகாரிகள் மீண்டும் ஆந்திர அதிகாரிகளை தொடர்பு கொண்டு பூண்டி அணைக்கு தண்ணீர் திறந்துவிட கேட்டு கொண்டனர். இந்த கோரிக்கையை ஏற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு தமிழகத்துக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார்.
அதன்படி கண்டலேறு அணையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 200 கன அடி திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நீரானது 177 கிலோ மீட்டர் தூரம் பயணித்து,
தமிழக ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை "ஜீரோ பாயிண்ட்"டை வந்தடையும். அங்கிருந்து 25 கிலோமீட்டர் பாய்ந்து, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை அடைய உள்ளது. கண்டலேறுவில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், இரண்டு நாட்களுக்குள்
பூண்டியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கிருஷ்ணா நீர் வரும் சாய் கால்வாயை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications