அணைகளில் குறையும் நீர்மட்டம்: குடிநீர் தட்டுபாடு அபாயத்தில் 3 மாவட்டங்கள்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வறண்டு வருவதால் குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பாபநாசம் அணை பிரதான அணையாக உள்ளது. இந்த அணை மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் 46107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பாபநாசம் அணையில் தொடங்கி 130கிமீ தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைகாயலில் கலக்கும் தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக திகழ்கிறது. இந்த ஆற்றுபடுகையில் இருந்து தான் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டத்துக்கு குடிநீர் செல்கிறது.

ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை
ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை சரியாக தொடங்கினாலும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் பெய்யும் வடகிழக்கு பருவமழை மூலம்தான் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பும். அப்போது தேங்கி வைத்தால் அந்த தண்ணீர் தென்மேற்கு பருவமழை காலம் வரை தாக்கு பிடிக்கும். ஆனால் போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாததால் அணையில் போதிய அளவு தண்ணீரும் இல்லை.

அணைகள் நீர் இருப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 28.25 அடியாக குறைந்து காணப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 10.88 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 15 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.

50 கிராமங்களுக்கு குடிநீர்
ராமநதி அணை, கடனாநதி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வறண்டு வருவதால் கடையம் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.

4000 ஏக்கர் பயிர்கள்
ராமநதி அணைப் பாசனத்தில் 4,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் இப்பகுதியில் அறுவடை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பை கொண்டு பிசான சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்பட்டதால் சாகுபடி பாதிப்பின்றி தப்பியது.

குடிநீர் தட்டுப்பாடு
அணை வறண்ட காரணத்தாலும் அணையில் 25 அடிக்கு மேல் சகதி இருப்பதாலும் ஓரிரு நாளில் அணை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே கடையம் பகுதியில் 25 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

தண்ணீர் தேவை
கடனாநதி அணையின் நீர்மட்டம் 39.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9.61 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 9,000 ஏக்கர் நிலங்களுக்கு இன்னும் 15 தினங்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

பாபநாசம் அணை
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 61.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 170.02 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்கு 605 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 71.19 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.53 அடியாகவும் இருந்தது.

நெல் சாகுபடி
மணிமுத்தாறு அணைக்கு 8 கனஅடிதான் நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 530 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனம் செய்யப்பட்டுள்ள 86,107 ஏக்கரில்அறுவடை செய்ய இன்னும் 3 வாரங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய நிலை உள்ளது.

3 மாவட்டங்களின் குடிநீர் தேவை
இந்த அணைகளின் நீர்மட்டம் 50 அடியாக குறையும் பட்சத்தில் வரும் மாதம் இறுதி வரை இவ்விரு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

பருவமழை கைகொடுக்குமா?
இம்மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு குறைந்து வருவதால் பரவலாக குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கினால்தான் அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும். அதுவரை குடிநீர் பிரச்னையை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்தால் குடிநீர் பிரச்னையை சமாளிக்க வாய்ப்புள்ளது.

வறண்ட ஆறுகள்
வடக்குபச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் வறண்டு மூடப்பட்டன. ராமநதி அணை ஓரிரு நாளில் மூடப்படும். குறைந்த நீர்மட்டம் உள்ள குண்டாறு, கருப்பாநதி அணைகளில் தற்போதைய நிலவரப்படி சகதிதான் உள்ளது.
அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் மட்டும் 60 அடிக்கு அதிகமாக நீர் இருப்பு உள்ளது.

கோடை மழை பெய்யணும்
கோடை மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இல்லையென்றால் குடிநீர் தட்டுபாட்டை தவிர்க்க முடியாது என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications