தமிழகத்தை மிரட்டும் தண்ணீர் பஞ்சம்!!: ஓட்டு கேட்க போக மிரளும் அதிமுகவினர்
சென்னை: ஓட்டு கேட்டு கிராமப்புறங்களுக்கு போகும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் சந்திக்கும் தலையாய பிரச்சினை தண்ணீர்தான். காலி குடங்களோடு... சாலைமறியல் செய்வதோடு... குடிநீருக்கு வழி என்ன என்றுதான் கேட்கின்றனர்.
மிரட்டும் மின்வெட்டும்... கும்மியடிக்கும் தண்ணீர் பஞ்சமும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளை கொஞ்சம் அதிகமாகவே பதம் பார்க்கிறது.
மழை வளம் குறைந்து போனதால், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கின்றன. இது ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது.

வறட்சியின் பிடியில்
கடந்த 2011 - 2012 என, அ.தி.மு.க., ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளுமே வறட்சி ஆண்டுகளாக அமைந்துவிட்டன. 2013ல் ஓரளவிற்கு மழை இருந்தாலும், இன்றைய தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால், தற்போது, மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
தேர்தலில் எதிரொலிக்கும்
மறுபுறம், வேளாண்மை படுத்துவிட்டது.இது, தற்போதைய தேர்தலில், பல தொகுதிகளில் ஆளும்கட்சி மீது அதிருப்தியாக எதிரொலிக்கும் என, கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடிநீர் தட்டுப்பாடு
தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலுார், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலுார், புதுக்கோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது
வேலூரில் மோசம்
வேலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 163 போராட்டங்கள் நடந்து உள்ளன. 40 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறதாம்.
அதள பாதாளத்தில்
சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 300 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர், 800 அடி தோண்டினாலும் கிடைப்பதில்லை.
வட மாவட்டங்களில் வறட்சி
வட மாவட்டங்களான காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் வறட்சியே நிலவுகிறது.
சென்னையில் பற்றாக்குறை
சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீர், கிருஷ்ணா நீர் வந்தாலும், நிலை சீரடையவில்லை. வீட்டு இணைப்புக்களிலும் அழுத்தக் குறைவால், குடிநீர் சரியாக கிடைப்பதில்லை. லாரிகள் மூலம் கிடைக்கும் குடிநீருக்காக, காலி குடங்களுடன் மக்கள் தவம் கிடக்கும் நிலை, பல பகுதிகளில் உள்ளது
காஞ்சியில் கவலை
காஞ்சியில் விளைநிலங்கள், மனைகள் ஆவதால், சாகுபடி பரப்பளவு ஒரு லட்சம் ஏக்கர் வரை குறைந்து உள்ளது. இம் மாவட்டத்தில், பாலாறு, செய்யாறு ஆகிய இரு ஆறுகள் உள்ளன. இந்த ஆற்று படுகைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், 100 அடியில் கிடைத்த நிலத்தடி நீர், தற்போது, 300 அடியில் தான் கிடைக்கிறது
காலி குடங்களுடன்
புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுகிறது. விளை நிலங்களும், மேய்ச்சல் நிலங்களும் தரிசு நிலங்களாக மாறி விட்டன. நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்தில் உள்ளது. அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில், கிணற்றுநீர் உப்புநீராக மாறிவிட்டது. அந்த பகுதி மக்கள், குடிநீருக்காக தினசரி காலிக் குடங்களுடன் மைல் கணக்கில் அலைந்து திரிகின்றனர்.
நிலத்தடி நீர்மட்டம்
தமிழகம் முழுவதும், நினைத்துப்பார்க்க முடியாத அளவில், அசுர வேகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. அதேபோல், மதுரை மாவட்டத்தில் நிலத்தடிநீர் அதிகபட்சமாக 1000 அடி வரை இறங்கி உள்ளது. கரூரில் 750 அடிக்கும் கீழே இறங்கிவிட்டது.
மேற்கு மாவட்டங்களில் சிக்கல்
மேற்கு மாவட்டங்களான, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அங்கு வாக்கு சேகரிக்கப் போகும் பலரும் விரட்டியடிக்கப்படுகின்றனர்.
தென் மாவட்டங்களில்
தெற்கு மாவட்டங்களான மதுரை, தேனி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர்,சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் குடிநீர் கேட்டு மக்கள் போராடி வருகின்றனர். ஒரு குடம் ரூ.10 கொடுத்து வாங்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.
சேமிக்க தவறிய அரசுகள்
தண்ணீர் பற்றாக்குறைக்கு, இயற்கையை மட்டும் காரணம் காட்ட முடியாது என, சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஒருபுறம் மழை பற்றாக்குறை இருந்தாலும், கிடைக்கும் மழையை முறையாக சேமித்து வைக்க தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசுகள் தவறிவிட்டனர்.
மழைநீர் சேகரிப்புத் திட்டம்
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம், நீராதாரங்களுக்காக செய்யப்பட வேண்டிய வேலைகளில் வெறும் ஒரு துளி தான். ஆனால், அந்த ஒரு துளியும் தற்போது மடையோடு அனுப்பப்பட்டு விட்டது.
மணல் கொள்ளை
கணக்கில்லாத மணல் கொள்ளை; நீராதார, நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள்; ஏரிகள், கண்மாய்களின் முறையில்லா பராமரிப்பு ஆகியவை தமிழகத்தை நிரந்தர பஞ்ச காலத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன. இதுகுறித்து, ஆட்சியாளர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
மக்கள் தொகை உயர்வு
ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்கு, 1,921 டி.எம்.சி., நீர் தேவை. மக்கள் தொகை அதிகரிப்பால், இது, 2050ல், 2,038 டி.எம்.சி.,யாக உயரும். வழக்கமாக, 0.106 டி.எம்.சி., தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கூட, கடும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கவனிக்குமா அரசுகள்
கடலில் வீணாக கலக்கும் 150 டி.எம்.சி., நீரை சேமிக்க, கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.இது இந்த தேர்தலில் பிரதிபலிக்கிறதோ இல்லையோ, இதுகுறித்து தமிழர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும். நம் எதிர்காலத்திற்காக செயலில் ஈடுபட வேண்டும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications