வெற்றியை நோக்கி எங்கள் கூட்டணி.. வைகோ
ராஜபாளையம்: மக்கள்நலக் கூட்டணி வெற்றியைத் தேடிச் செல்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் பகுதிக்கு வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சட்டசபைத் தேர்தல் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும்போது, மக்கள் நலக்கூட்டணி வெற்றியை தேடி செல்கிறது. 3 கட்ட பரப்புரையை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்.

எங்களது தேர்தல் வாக்குறுதிகளை தயார் செய்யும் பணியில் உள்ளோம். ஊழல் ஒழிப்பு, பூரண மதுவிலக்கு, ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்டவை அடங்கிய வகையில் எங்களது வாக்குறுதி இருக்கும்.
மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சும் நடந்து வருகிறது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு பெருகி கொண்டு இருக்கிறது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications