இதுபோன்ற மிரட்டல்களை எல்லாம் சிறு வயதிலேயே பார்த்துவிட்டோம்.. அசராத தினகரன்!
இதுபோன்ற மிரட்டல்களை எல்லாம் சிறு வயதிலேயே பார்த்துவிட்டோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: இதுபோன்ற மிரட்டல்களை எல்லாம் சிறு வயதிலேயே பார்த்துவிட்டோம் என வருமான வரித்துறை ரெய்டு குறித்து டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் வீடு, நண்பர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என 190க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த ரெய்டால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், மத்திய அரசுதான் இந்த சோதனைக்கு காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அஞ்சப்போவதில்லை..
தங்களை மிரட்டிப்பார்க்கவே இதுபோன்ற சோதனை நடத்தப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். இதற்கெல்லாம் தாங்கள் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

வீரமிக்க குடும்பம்..
87 வயதான தனது தந்தை முதல் பிறந்த குழந்தை வரை யாருக்கும் பயம் என்பதே கிடையாது என்றும் அவர் கூறினார். வீரமிக்க குடும்பத்திலும் வீரமிக்க மண்ணிலும் பிறந்தவர்கள் தாங்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பணிய வைக்க முடியாது
30 வயதிலேயே தான், தனது தம்பி, மற்றும் சித்தி ஆகியோர் ஒரு வருடம் ஜெயிலில் இருந்ததாகவும் அவர் கூறினார். தங்களை மிரட்டி மத்திய அரசு பணிய வைக்க முடியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சிறுவயதிலேயே பார்த்துவிட்டோம்
மேலும் ஜெ ஜெ டிவியை முடக்கியது போன்று ஜெயாடிவியை முடக்க பார்க்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் குற்ற்மசாட்டினார். இதுபோன்ற மிரட்டல்களை சிறு வயதிலேயே பார்த்துவிட்டோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பகல் கனவு பலிக்காது
எங்களை அழித்துவிட்டு நீங்கள் வளர முடியாது என்றும் டிடிவி தினகரன் பாஜகவுக்குக்கு எச்சரிக்கை விடுத்தார். பாஜகவின் பகல் கனவு பலிக்காது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications