பழம் நழுவி பாலில் விழும் என்று பாஜக காத்திருக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: பழம் நழுவி எப்போது பாலில் விழும் என்று பா.ஜ.க காத்திருக்கவில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
சென்னை யானைக்கவுனியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழிசை, தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி இயலாமையால் அமைந்தது. 2 பெரிய கட்சிகளை வீழ்த்துவதற்காக கடந்த 2014ல் அமைத்ததுபோல், கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

2014 லோக்சபா தேர்தலில் அமைந்த கூட்டணி போல இப்போது கூட்டணி அமைக்க முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் 2 கட்சிகளுக்கு மாற்றாக , மாற்றுச் சக்தியாக ஒரு முழுமையான மக்களுக்கு நலம் தரும் கூட்டணியாக அமைய வேண்டும் என்பது தான் நோக்கம். நிச்சயமாக பலம் பொருந்திய மாற்று சக்தியாக 2016 சட்டசபைத் தேர்தலை சந்திப்போம்.
ஒவ்வொரு கட்சியின் தலைவரின் பேச்சுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு தார்மீக உரிமையும், கடமையும் அனைத்து தலைவர்களுக்கும் இருக்கிறது என்பதை மறுபடியும் வலியுறுத்துகிறேன். அவரவர் தனித்தனியாக பிரிந்திருந்தால் இந்த மாபெறும் பிரச்சனையை எதிர்கொண்டு, 2 சக்திகளை எதிர்கொண்டு வெற்றிப் பெற முடியாது.
அதனால் இந்த நேரத்தில் யார் முதல்வர், யார் தலைமையில் கூட்டணி போன்ற பிரச்சனைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு, ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் வெற்றிப்பெற முடியும். கூட்டணிக்காக அழைப்பதால் நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல. நாங்கள் பலம் பொருந்தியவர்களாகதான் இருக்கிறோம்.
பலம் பொருந்திய கட்சிகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். நாங்கள் 234 தொகுதிகளுக்கும் தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 10க்கு மேற்பட்ட விருப்பமனுக்கள் வந்துள்ளது. இருந்தாலும் அனைவரும் இணைந்திருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பழம் நழுவி பாலில் விழும் என்று காத்திருக்க மாட்டோம் என்றும் கூட்டணி அமையாவிட்டாலும் தேர்தலை சந்திப்போம் என்றும் கூறியுள்ளார் தமிழிசை சவந்தராஜன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications