நாங்கள் தான் உண்மையான அதிமுக.. இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கே: கேபி முனுசாமி நம்பிக்கை

தாங்கள் தான் உண்மையான அதிமுக என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாங்கள் தான் உண்மையான அதிமுக என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி ஒன்றாக இணைந்துள்ள ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியும் தினகரன் தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து வருகின்றன. இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தை விரைந்து முடிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

We are only the True ADMK: KP Munusami

இதையடுத்து இரட்டை இலைச்சின்னம் தொடர்பான விசாரணை டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, எம்பி மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டனர்.

முன்னதாக சென்னை விமானநிலையத்தில் கேபி முனுசிமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உண்மையான அதிமுக நாங்கள் தான் என்றார்.

மேலும் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக தினகரன் தரப்பு நேற்று கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+