விஜயகாந்த்-தர்மர், நான்-அர்ஜூனன், திருமா-பீமர், ஜி.ரா-நகுலன், முத்தரசன்-சகாதேவன்... சொன்னது வைகோ
சென்னை: நாங்கள் பஞ்சபாண்டவர்கள். விஜயகாந்த் - தர்மர், நான் அர்ஜூனன், திருமாவளவன் - பீமர், ஜி.ராமகிருஷ்ணன் - நகுலன், முத்தரசன் - சகாதேவன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நானும் திருமாவளவனும் யாரையும் விஜயகாந்திடம் நெருங்க விடமாட்டோம்.
அரண் போல காப்போம் என்றும் வைகோ கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் தமிழக முதல்வாராவது உறுதி என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தேர்தலில் ம.ந.கூ - தேமுதிக மகத்தான வெற்றி பெறும்; விஜயகாந்த் முதல்வராவார் என நம்பிக்கை தெரிவித்தனர்.
வைகோவின் பேச்சு வழக்கமான உணர்ச்சி வசப்பட்ட பேச்சாக இல்லாமல் கூடுதல் உற்சாகமாகவே இருந்தது. பகத்சிங்கில் ஆரம்பித்து பஞ்சபாண்டவர்வரை சென்றது அவரது பேச்சு.
மூச்சுக்கு மூச்சு கேப்டன் விஜயகாந்த் என்றார் வைகோ. விஜயகாந்த் - தர்மன், வைகோ அர்ஜூனன், திருமாவளவன் - பீமன், ஜி.ராமகிருஷ்ணன் - நகுலன், முத்தரசன் - சகாதேவன் என்று கூறினார்.
தர்மருக்கு இரு பக்கமும் அர்ஜூனனாகிய நானும் பீமனாகிய திருமாவும் அமர்ந்து இருக்கிறோம். நகுலன், சகாதேவனாக தோழர்கள் ஜி.ராமகிருஷ்ணனும், முத்தரசனும் அமர்ந்திருக்கிறார்கள்.
கேப்டன் விஜயகாந்திடம் யாரையும் நெருங்க விடமாட்டோம். எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக்கொள்வோம். எங்கள் கூட்டணி அமைந்த உடன் 5 கட்சித் தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். எதிர் முகாமில் இருப்பவர்கள்தான் கிலி பிடித்துப் போய் இருக்கிறார்கள் என்றார் வைகோ.
திராவிடர் இயக்கப் பாரம்பரியத்தில் வந்ததாக வைகோ சொல்லிக் கொள்கிறார், அம்பேத்கர் வழிவந்த திருமா, இந்துத்துவ எதிர்ப்பாளர்களாக தங்களைச் சொல்லிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள். இவர்கள் தங்களை தாங்களே அழைத்துக் கொள்ள மகாபாரதக் கதாபாத்திரங்கள்தான் கிடைத்ததா? என்று ஒரு பெரியாரிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே சென்டிமெண்டிற்குள் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட்களையும் இழுத்து வந்து விட்டார் விஜயகாந்த் என்றும் பேசிக்கொள்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications