உரிமைக் குழு நோட்டீஸை சந்திக்கத் தயார்.. மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபையின் உரிமைக் குழுவின் நோட்டீஸை சந்திக்க சட்டப்படி நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை உரிமைக் குழு கூடி குத்காவை சட்டசபையில் காட்டியது தொடர்பான விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கு சபாநாயகருக்குப் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில் இதை திமுக சட்டப்படி சந்திக்கும். சட்டப்படி நோட்டீஸை சந்திப்போம்.
ஜூலை 19ம் தேதி சட்டசபையில் குத்காவைக் காட்டிப் பேசினேன். ஆனால் 40 நாட்களுக்குப் பிறகு நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்று தெரியவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது.
சட்டசபையில் திமுக எம்.எல்ஏக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட அதிமுக முயற்சிக்கிறது. இது சட்டரீதியாக சந்திப்போம். தமிழகத்தில் குத்கா விற்பனை இன்று வரை தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இன்று கூட பொன்னேரியில் ரூ. 10 லட்சம் குத்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உண்மையில் மானம் இருந்தால், வெட்கம் இருந்தால், ரோஷம் இருந்தால், சொரணை இருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் குத்கா விற்பனையைத் தடுக்க முடியாத எடப்பாடி பழனிச்சாமி அரசுதான் பதவி விலகியிருக்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications