அப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்ற போட்டோவை வெளியிடவா.. பரபரப்பைக் கிளப்பும் கர்நாடக புகழேந்தி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்படும் என்று கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் வா. புகழேந்தி கூறியுள்ளார்.
மதுரை: அப்பல்லோவில் ஜெயலலிதாவின் சிகிச்சை புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும். அனுமதிக்காக காத்திருக்கிறோம். அவை வெளியானால் எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வரும் என்று கர்நாடக மாநில அதிமுக அம்மா அணியின் செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அமைச்சர்கள், அதிமுக அம்மா அணியினர் டிடிவி தினகரனையும், சசிகலா குடும்பத்தையும் ஒதுக்கி வைத்து விட்டதாக கூறியதால் கர்நாடகாவில் இருந்து வந்து ஆர்பாட்டம் நடத்தி கூட்டத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்தவர் இந்த புகழேந்தி.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்
அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலர் தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் இன்று அதிமுக தொண்டர் ஒழுங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புகழேந்தி கலந்துகொண்டார்.

ஜெயலலிதா புகைப்படங்கள்
போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சையே அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த போது அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது சிபிஐ விசாரணை தேவை என்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்படும்.

உண்மை வெளியாகும்
ஜெயலலிதா புகைப்படங்கள் வெளியிட அனுமதிக்காக காத்திருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். அந்தப் புகைப்படங்கள் வெளியானால் எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வரும். அப்போது பலரது முகத்திரை கிழியும் என்று கூறியுள்ளார் புகழேந்தி.

ரத்தம் கக்கி சாவார்கள்
கொடநாடு, போயஸ் கார்டன் தெய்வம் வாழ்ந்த வீடு அங்கே போய் கை வைத்து விட்டு உயிரோடு திரும்ப முடியுமா? அங்கே கொள்ளையடித்தவர்கள் வரிசையாக சாகிறார்கள் இதை இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே? அதே போல அரசியலில் துரோகம் செய்தவர்களும் அனுபவிப்பார்கள் என்று திடீரென்று குண்டும் போட்டார் புகழேந்தி.












Click it and Unblock the Notifications