விஜயகாந்த்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம், வந்துருவார்.. சொல்வது குஷ்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் பேசி வருகிறோம். அவர் நிச்சயம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைவார் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. சின்னச் சின்ன கட்சிகள் எவற்றோடும் கூட்டணி குறித்து பேசவில்லை.
தற்போது பாஜகவின் நிலைமைதான் மோசமாக இருக்கிறது. யாராவது தங்களை கூப்பிட மாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். அந்த ஏக்கம் மக்களுக்கு தெரிகிறது என்றார் குஷ்பு.












Click it and Unblock the Notifications