நாங்கதான் எமன்...'கேப்டன்' பலே பேச்சு!
விழுப்புரம்: திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு நாங்கள்தான் எமன் என்று பேசியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாநத்.
உளுந்தூர்ப்பேட்டையில் கடந்த 12ம் தேதி பிரசாரம் செய்த விஜயகாந்த்துகுக திடீெனறு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. இதனால் பிரசாரத்தை நிறுத்திவிட்டு விழுப்புரம் போய் விட்டார்.
அங்கு தங்கி ஓய்வெடுத்த அவர் மாவட்ட செயலாளர் வீட்டிலேயே தங்கி மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று விழுப்புரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது...

நாங்களும் அம்பேத்கர் மாதிரிதான்
சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் அம்பேத்கர். நாங்களும் அப்படித்தான் இருக்கிறோம். ஊழல், கொலை, கொள்ளை இல்லாத நாடாக்க அம்பேத்கர் போராடினார். தற்போது அந்த நிலை இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை.

உடம்புக்கு சரியில்லை
ஓய்வில்லாமல் பிரச்சாரம் மேற்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை. இந்த பகுதிகளில் இன்னும் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது.

நல்லாட்சி அமைய தே.ஜ.கூ.
இந்தியாவில் ஊழலற்ற, நியாயமான நல்லாட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அனைவரும் வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.

சேலம் கூட்டம்
தொடர்ந்து அவர் சேலம் புறப்பட்டுச் சென்று கள்ளக்குறிச்சியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் சாதி, மத சார்பற்ற கூட்டணியை அமைத்துள்ளோம். எங்களிடம் எந்த சண்டையும் இல்லை. நாங்கள் அண்ணன்-தம்பி போன்று பாச உணர்வில் இருக்கிறோம்.

சோனியா ராகுலின் மோசமான ஆட்சி
மத்தியில் மோசமான ஆட்சியை சோனியாவும், ராகுலும் நடத்தி வந்தனர். எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நரேந்திர மோடி பிரதமராக அமர வேண்டும்.

நாங்கள்தான் எமன்
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு எமனாக இருப்பது நாங்கள் மட்டுமே. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்குமேல் ஆகியும் மலைவாழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மின்வெட்டையும் சரிசெய்ய முடியவில்லை. இன்று மின் சப்ளையில் சதி செய்து இருப்பதாக கூறுகிறார்.

மோடி வந்துட்டா தண்ணீர், கரண்ட் கிடைக்கும்
எனவே, மோடி பிரதமராக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்தால் மின்சாரம், குடிநீர் வினியோகம் சீராக கிடைக்கும்.

இது புதிய அத்தியாயம்
எங்கள் கூட்டணி புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications