மறுபடியும் கூவத்தார் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. தமிழிசை சொல்கிறார்
சென்னை: தற்போது உள்ள அரசியல் சூழலைப் பார்த்தால் தமிழகத்தில் மீண்டும் ஒரு கூவத்தூர் சூழல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக தொடர்ந்து பிளவுபட்டு வருகிறது. யார் யார் பக்கம் உள்ளனர் என்றே தெரியவில்லை. அதிமுக எம்.எல்.ஏக்களும் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதும் தெரியவில்லை.

இப்போது உள்ள சூழலைப் பார்த்தால் மீண்டும ஒரு கூவத்தூர் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜெயலலிதா மறைந்த தினம் முதல் இதே குழப்ப நிலைதான் தமிழகத்தில் நீடித்து வருகிறது.
அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் இதே நிலை நீடித்தால் பொதுத் தேர்தல் தான் வரும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிலைமையை சரி செய்யாவிட்டால் தேர்தல் சந்தித்துதான் தீர வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications