சர்ச்சைக்குரிய "நடிகர் சங்கம்- எஸ்பிஐ சினிமாஸ்" ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம்: சரத்குமார்
சென்னை: சர்ச்சைக்குரிய நடிகர் சங்கம்- எஸ்பிஐ சினிமாஸ் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகம் கட்டுவதற்கு எஸ்பிஐ சினிமாஸுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக நடிகர்கள் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி குற்றம்சாட்டி வந்தது.

தற்போது நடைபெற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் இதுதான் பிரதான பிரச்சனையாகவும் இருந்தது. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி அபார வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற விஷால் அணியினர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
15 ஆண்டுகளாக நடிகர் சங்கத்துக்காக பாடுபட்டுள்ளேன். 2004ல் ரூ 4.2 கோடியாக இருந்த நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டது.
விஜயகாந்த் தலைவராக இருந்போது கடன் அடைக்கப்பட்டு ஒரு கோடி வைப்பு நிதி திரட்டப்பட்டது. 2007ல் கலைநிகழ்ச்சி நடத்தி சங்கத்துக்கு ரூ.2 கோடி வைப்பு நிதி திரட்டப்பட்டது. தற்போது நடிகர் சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூ.3 கோடி உள்ளது
நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகள் 10 நாட்களில் நாசரிடம் ஒப்படைத்துவிடுவேன். என் மீது பல்வேறு முறைகேடுகள் முன்வைக்கப்பட்டது மிகவும் காயப்படுத்திவிட்டது.
இதனால் கடந்த செப்டம்பர் 29-ந் தேதியன்றே எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நடிகர் சங்கத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம்.
இந்த ஆவணத்தையும் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கொடுத்துவிடுவேன். சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு எந்த நேரத்திலும் உதவுவதற்கு தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.
ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை முன்னரே வெளியிட்டிருந்தால், ஊழல் முறைகேடு செய்ததால் ரத்து செய்துவிட்டோம் என விமர்சனம் வந்திருக்கும் என்பதால் வெளியிடவில்லை என்றும் விளக்கம் அளித்தார் சரத்குமார்.
கண்ணீர்
இந்த சந்திப்பின் போது, தம் மீது முறைகேடு புகார்கள் கூறப்பட்டது மிகவும் காயப்படுத்திவிட்டது என கண்ணீர் சிந்தினார் சரத்குமார். இதனால் சில நிமிடங்கள் நா தழுதழுத்த குரலில் சரத்குமார் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications