ஆமாம்.. காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம்.. தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம்
காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருச்சி: காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டது. பிரதமர் கர்நாடாக தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பதால் காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து இதுதொடர்பான வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம். கர்நாடக தேர்தலுக்காக உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டோம்.
இதுபோன்ற அரசியலை அனைத்து கட்சிகளும் செய்கிறது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலுக்காக அவகாசம் கேட்டோம், அரசியல் செய்தோம் என தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications