ஜெ.வுக்கு நோய் தொற்று ஏற்படக் கூடாது என நல்லெண்ணத்தில் சசிகலா குடும்பம் சொன்னதை ஏற்றோம்- ஓபிஎஸ்
ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் நாங்கள் அவரை பார்க்கவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டு மேலும் பாதிக்கக் கூடாது என்பதால் சசிகலா குடும்பத்தினர் என்ன சொன்னார்களோ அந்த தகவலை கேட்டுக் கொண்டோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஆர்கே நகர் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேரை நீக்கிவிட்டு செய்தியாளர்களை முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்தனர்,.

அப்போது துணை முதல்வரிடம் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் ஜெயலலிதா மீது பாசம் இருந்திருந்தால் இதுபோல் அவர் சிகிச்சை பெறுவதாக கூறும் வீடியோவை வெளியிட்டிருக்க மாட்டார்கள்.
அதுபோல் இந்த வீடியோ குறித்து அமைச்சர்களுக்கு தெரியும் என்று தினகரன் கூறுவது சுத்த பொய். நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை.
அவரை பார்த்தால் நோய் தொற்று ஏற்படும் என்றார்கள், அதுபோல் நாங்கள் பார்த்து ஜெயலலிதா நோய் தொற்றால் பாதிக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் நாங்கள் யாரும் பார்க்கவில்லை.
உள்ளே நடப்பதை சசிகலா குடும்பத்தினர் எங்களுக்கு தெரியப்படுத்தினர். அதை நாங்கள் கேட்டுக் கொண்டோம் என்றார் ஓபிஎஸ்.
-
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications