அதிமுகவில் இருந்து நாங்கள் ஓட வேண்டிய அவசியமில்லை... சசிகலா புஷ்பா ஆவேசம்
அதிமுகவில் இருந்து நாங்கள் ஓட வேண்டிய அவசியமில்லை என அதிமுக எம்பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் இருந்து நாங்கள் ஓட வேண்டிய அவசியமில்லை என அதிமுக எம்பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். மன்னார்குடி கும்பலிடமிருந்து அதிமுகவையும் தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அதிமுக எம்பி சசிகலா எம்பி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவுக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். தீபா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து தனிக்கட்சி தொடங்குவீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு இல்லை என்று கூறிய அவர், பிஎச்.பாண்டியன் அவர்கள் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருப்பவர்.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிமட்ட தொண்டர் எனக்கூறியுள்ளார். எனவே நாங்கள் கட்சியை விட்டு ஓட வேண்டிய அவசியமில்லை. கட்சிக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத சசிகலாவும் மன்னார்குடி கும்பல்தான் ஓடவேண்டும்.
மன்னார்குடி கும்பலிடமிருந்து அதிமுகவையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்றும் சசிகலாபுஷ்பா கேட்டுக்கொண்டார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications