"அடுத்த முதல்வர் சகாயமா? எங்களுக்கு அதெல்லாம் தெரியாதே” - தமிழகத்தில் 62.5% மக்கள் நிலை இதுதான்!
சென்னை: சகாயம் ஐஏஎஸ் முதல்வராக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருதுவது பற்றி எதுவும் தெரியாது என்று கிட்டதட்ட 62.5% மக்கள் லயோலா கல்லூரியின் முன்னாள் பேரசிரியர்கள் குழு நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு'எனும் அமைப்பு அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கருத்து கணிப்பு நடத்தியது. அதில்தான் இந்த பதிலும் வெளிவந்துள்ளது.
மழை, வெள்ளம், புறக்கணிப்பு, மதுவிலக்கு என்று பல்வேறு இயற்கை மற்றும் சமூகம் சார்ந்த கொந்தளிப்புகளினால் சமூக வலைதளங்களில் சகாயம் ஐ.ஏ.எஸ் போன்ற நேர்மையான அதிகாரி அடுத்ததாக முதல்வராக வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்தன.

சகாயம் 2016:
மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ் தன்னுடைய நேர்மையால் உயர்ந்தவர். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் தலையெழுத்தே மாறும் என்று இளைஞர்கள் பலர் இணைந்து "சகாயம் 2016" என்ற குழுவையே உருவாக்கினர்.

காமராஜர் மட்டுமே நினைவில்:
இந்நிலையில் காமராஜரை நினைவில் வைத்திருக்கும் அடித்தட்டு மக்கள், சகாயம் குறித்த பிரச்சாரங்கள் பற்றி தங்களுக்கு தெரியாது என்று இந்தக் கருத்துக் கணிப்பில் பதிலளித்துள்ளனர்.

அது எங்களுக்கு தெரியாது:
சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே சகாயம் குறித்த குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். மிஞ்சி இருக்கின்ற 62.5 சதவீத மக்கள் சமூக வலைதளத்தில் சகாயம் முதல்வராக வேண்டும் என்று எழும் கோஷம் பற்றி தெரியவே தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய அரசு தேவை:
எனினும், ஒட்டுமொத்த மக்களும் அடுத்ததாக ஒரு மக்கள் நலம் சார்ந்த ஆட்சியையே எதிர்பார்த்து வருகின்றனர் என்பது மட்டும் கண்கூடான உண்மை. கக்கனும், காமராஜரும் திரும்பி வருவதற்கு சாத்தியமில்லைதான். ஆனால், மக்களின் அத்தியாவசிய எதிர்பார்ப்புகளை தீர்ப்பதற்கான அரசு அமைந்தாலே தமிழகம் ஒரு சிறப்பான நிலைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மை நிலைமை இதுவே:
இன்னொரு வகையில் பார்த்தால் அவர் வரவேண்டும், இவர் வரவேண்டும் என்று தெரிவித்து கொண்டிருப்பதை மட்டுமே மக்களான நாமும் விரும்புகின்றோம். இந்தக் கருத்துக் கணிப்பும் அதையேதான் உணர்த்தியுள்ளது. என்ன செய்ய எப்போதுமே நம் வீட்டு சாக்கடைய சுத்தம் செய்யக் கூட நமக்கு ஒருவர் வேலைக்கு தேவைப்படுகிறது. இறங்கி சுத்தம் செய்ய எவருமே விரும்புவதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.












Click it and Unblock the Notifications