For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும் ஆனால் மறந்தவையாக மட்டும் இருக்காது : கமலஹாசன் பேச்சு

நடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும் ஆனால் மறந்தவையாக மட்டும் இருக்காது என்று கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் நீதி மய்யம்.. கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

    மதுரை : மதுரையில் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிவித்து பேசிய கமலஹாசன், நடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும் ஆனால், மறந்தவைகளாகமட்டும் ஆகிவிடாது என்று கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

    மதுரை ஒத்தக்கடையில் இன்று மாலை நடந்த கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தி கமலஹாசன் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

     We dont forget about the past says Kamalhassan

    இந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சோம்நாத் பாரதி மற்றும் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கட்சி கொடி ஏற்றிய பின்பு, மக்கள் நீதி மய்யம் என்கிற தனது கட்சிப் பெயரை அறிவித்த பின்பு, மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்த பின்பு, மக்களின் பலத்த கரகோஷத்திற்கு தனது உரையை தொடங்கினார் கமலஹாசன்.

    35 ஆண்டுகளாக ரசிகர் மன்ற பெயரில் இயங்கி வந்த நாங்கள் தற்போது மக்களுடன் கரம் கோர்த்து நல்லது செய்ய வந்திருக்கிறோம். இதற்கு முன் நாங்கள் நல்லது செய்ய வந்தபோது எல்லாம் வந்த முட்டுக்கட்டைகள் எல்லாம் மக்களுக்குத் தெரியும்.

    இதுவரை நடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும் ஆனால், மறந்தவையாக மட்டும் ஆகிவிடாது. இதுவரை ஆட்சி செய்தவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றவே நாங்கள் வந்து இருக்கிறோம் என்று கமலஹாசன் குறிப்பிட்ட போதும், மக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

    English summary
    We dont forget about the past says Kamalhassan. Today Kamalhassan announced his party name, flag and principle policies at Madurai meeting .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X