'நோ' நிர்வாண மசாஜ்-சிலரது அரசியல் லாபத்துக்காகவே சசிகலா புஷ்பா மீது புகார்- பணிப்பெண்களின் பரபர மனு
சிலரது அரசியல் லாபங்களுக்காக சசிகலா புஷ்பா மீது பொய் புகார் கொடுத்ததாக அவரது வீட்டு பணிப் பெண்கள் போலீசில் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தவறான சில நபர்களின் அரசியல் லாபங்களுக்காகவே ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்தோம் என அவரது வீட்டு பணிப்பெண்கள் பானுமதி மற்றும் ஜான்சி ராணி ஆகியோர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா தாக்கிய சம்பவம் தொடர்பாக போயஸ் கார்டன் பங்களாவில் விசாரணை நடத்தப்படது. இந்த விசாரணையின் போது தாம் தாக்கப்பட்டேன் என ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா எம்.பி. கூறியிருந்தார்.
அப்போது ஜெயலலிதா மீது புகார் கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதனால் அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை புகார்
இதையடுத்து திடீரென சசிகலா புஷ்பாவின் வீட்டு பணிப் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி இருவரும் தூத்துக்குடி போலீசில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் பாலியல் தொல்லை தந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மறுத்த சசிகலா புஷ்பா
ஆனால் இந்த புகாரை திட்டவட்டமாகவே சசிகலா புஷ்பா மறுத்துவந்தார். இதனால் ஜாமீன் பெற சசிகலா புஷ்பா நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

திடீர் திருப்பம்
இந்த நிலையில் திடீரென தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டருக்கு பானுமதியும் ஜான்சிராணியும் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில் 'அரசியல் லாபங்களுக்காக சில தவறான நபர்களின் தூண்டுதலால்' சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்தோம் என தெரிவித்துள்ளனர்.

நல்லபடியாகவே இருந்தோம்
மேலும் தங்களது புகாரை வாபஸ் பெற விரும்புவதாகவும் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் சசிகலா புஷ்பாவின் வீட்டில் தாங்கள் நல்ல படியாக இருந்தோம் என்றும் எந்த பாலியல் தொல்லையும் தரவே இல்லை எனவும் பானுமதியும் ஜான்சிராணியும் தெரிவித்துள்ளனர்.

உண்மையை உடைப்பார் சசிகலா புஷ்பா?
தம் மீது பொய் வழக்கு போட யார் தூண்டிவிட்டது என்ற உண்மையை விரைவில் அம்பலப்படுத்தப் போகிறார் சசிகலா புஷ்பா. இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications