இனி ஒரு புள்ள செத்துகிடப்பதை பார்த்துகிட்டு இருக்க முடியாது.. 'நீட்'டுக்கு தீர்வு தேவை: கமல்ஹாசன்
நீட் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: நீட் பிரச்சனையில் அடுத்த ஆண்டுக்குள் ஒரு தீர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் டிவியில் தாம் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியதாவது:
நாட்டிலும் புரட்சி துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் யார் காரணம்? என்பதெல்லாம் பேச நிறைய பேர் இருக்கிறார்கள்
நாம்... மக்கள், மாணவர்கள் நீட் விவகாரத்தில் ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். ஒரு புள்ள செத்துப் போச்சு... இனி ஒரு புள்ள செத்துகிடப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

கை கோர்ப்போம்
நமது இனத்துக்கு பல முறை துரோகங்கள் இழைக்கப்பட்டது. அப்போதெல்லாம் கை பிசைந்து கொண்டிருந்தோம். இனி அப்படியில்லாமல் கை கோர்ப்போம்

கல்வியாளர்களுடன்...
நீட் விவகாரத்தில் தீர்வு என்னிடம் இல்லை. தீர்வை வைத்துக் கொண்டா சொல்லமாட்டேன் என்கிறேன். கற்றவர்களுடன் கை கோர்த்ததால் நான் உயர்ந்திருக்கிறேன். அதைத்தான் செய்ய வேண்டும்.

மாணவர்கள்
பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என மாணவர்கள் ஒதுங்க கூடாது. நாளைய பெரியவர்கள் நீங்கள்... உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.
Recommended Video


அட்லஸ் அல்ல
அனைவரும் தீர்வை நோக்கி செல்வோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். உலகைத் தாங்கி பிடிக்க நான் அட்லஸ் அல்ல.

சுதந்திர போராட்டமா?
ஆனால் உலகம் என்னை தாங்கிப் பிடிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அப்படி தாங்கி பிடித்ததாலேயே நான் கலைஞனாக நிமிர்ந்து நிற்கிறோம். நல்ல குடிமகனாக நாம் தலைநிமிர நாம் ஒன்றுபட வேண்டும். கட்சி, சாதி, மத பேதங்களைக் கடந்து ஒன்றுபட வேண்டும். அப்படியானால் இது என்ன சுதந்திர போராட்டமா?

சுயநலவாதிகள்
ஆம் அதுதான்... காற்று வாங்க சுதந்திரம் கிடைத்ததே என்பதற்காக பெருமிதம் கொள்ளாமல் அதையும் கடந்து செல்ல வேண்டும். நமது கனவுகள் ஒன்றுதான். இவற்றை கலைப்பதற்கு சுயநலவாதிகள் இருக்கிறார். அவர்களுக்கு முடிந்த அளவு புத்தி சொல்வோம். இல்லையெனில் நகர்த்தி வைப்போம்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.












Click it and Unblock the Notifications