For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பவில்லை ... ஆட்சி முடிவுக்கு வரணும் - டிடிவி தினகரன்

செங்கோட்டையனை தமிழக முதல்வராக்க வேண்டும் என 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஹைகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    செங்கோட்டையனை நங்கள் முதவராக்க நினைக்கவில்லை தினகரன் தகவல்- வீடியோ

    சென்னை: கல்வியமைச்சர் கே ஏ செங்கோட்டையனை தமிழக முதல்வராக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் சார்பில் வாதிடப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா முதல்வர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டபோது, முதல்வர் பதவிக்கு செங்கோட்டையன் பெயரும் பரிசீலிக்கப்பட்டது.

    ஆனாலும் செங்கோட்டையனிடம் அரசியல் பாடம் படித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் காலம் நன்றாக இருந்த காரணத்தால் அவர் முதல்வரானார்.

    கேஏ செங்கோட்டையன்

    கேஏ செங்கோட்டையன்

    செங்கோட்டையனுக்கு கல்வியமைச்சர் பதவியும், அதிமுக அவைத்தலைவர் பதவியும் அப்போதைக்கு அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல் முறையாக செங்கோட்டையனை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்ய விரும்பியதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    உயர்நீதிமன்றத்தில் வாதம்

    உயர்நீதிமன்றத்தில் வாதம்

    தமிழக அரசை கலைக்கும் நோக்கில் செயல்பட்டதாக கூறி டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏகள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டசபைத் தலைவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அதனை ரத்து செய்ய கோரி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நேற்று 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

    செங்கோட்டையன் முதல்வர்

    செங்கோட்டையன் முதல்வர்

    அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டசபை உறுப்பினர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன்,
    எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு முறைகேடுகளில் சிக்கியிருப்பதால் அந்த கோரிக்கை மனுவைக் கொடுத்தோம்.
    ஆளுநரிடம் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார் என்பது எங்கள் நம்பிக்கை. கட்சியின் மூத்த உறுப்பினர் செங்கோட்டையனை முதல்வராக நியமிக்கப்பட்ட வாய்ப்பு தர வேண்டும் என்று விரும்பியே ஆளுநரிடம் மனு கொடுத்தோம் என்று வாதிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டிடிவி தினகரன் மறுப்பு

    டிடிவி தினகரன் மறுப்பு

    செங்கோட்டையனை முதல்வர் ஆக்க விரும்பினோம் என டிடிவி தினகரன் தரப்பு கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பியதாக உயர்நீதிமன்றத்தில் வாதிட்ட தகவலில் உண்மையில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    செய்தியில் உண்மையில்லை

    செய்தியில் உண்மையில்லை

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவான தினகரன் எம்எல்ஏ, தங்கள் தரப்பு வழக்கறிஞரிடம் பேசிவிட்டு உரிய விளக்கம் அளிப்பதாக சட்டசபை வளாகத்தில் கூறியுள்ளார். ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே தனது எண்ணம் என்றே கூறியுள்ளார்.

    English summary
    RK Nagar MLA TTV Dinakaran has said that they never wanted Senkottayan as CM and the news on this is not true, he refuted. TTV Dinakaran loyalist MLAs have suggested K A Sengottaiyan as Chief Minister to save the AIADMK government in High court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X