டெல்லியில் கிடைத்த ஓட்டு ஒவ்வொன்றும் மிகப் பெரியது.. சொல்கிறது தேமுதிக

Subscribe to Oneindia Tamil

We respect Delhi voters's response to our party, says DMDK
மார்த்தாண்டம்: டெல்லி சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளையும் பெரிதாக கருதுகிறோம். டெல்லி தேர்தலில் களத்தில் இறங்கியதே எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றிதான். இதன் மூலம் இனி டெல்லியில் ஆட்சிக்கு வருபவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை கவனிப்பார்கள் என்று தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.

நாகர்கோவில் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக வந்தார் சந்திரகுமார். வழக்கில் ஆஜராகி அது ஒத்திவைக்கப்பட்ட பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

2006 முதல் 2013 வரை ஏராளமான இடைத்தேர்தல்களை தேமுதிக சந்தித்துள்ளது. இடைத்தேர்தல்களில் அதிமுகவும், திமுகவும் ஒரே பாணியில் செயல்படுகின்றனர்.

ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று வாக்காளர்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டார். ஆனால் அது நடக்கவில்லை.

டெல்லி தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளையும் பெரிதாக கருதுகிறோம். டெல்லி தேர்தலில் களத்தில் இறங்கியதே எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றிதான். இதன் மூலம் இனி டெல்லியில் ஆட்சிக்கு வருபவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை கவனிப்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி செயற்குழு, பொதுக்குழு கூடி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார். 4 மாநில தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநில பிரச்சினைகளின் அடிப்படையில் கிடைத்த வெற்றியாகும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+