கூட்டணியில் நீடிக்கிறோமா? இல்லையா என்பதை அதிமுக தெளிவுபடுத்த வேண்டும்- வேல்முருகன் காட்டம்
சென்னை: அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீடிக்கிறதா? இல்லையா? என்பதை அதிமுகதான் தெளிவுபடுத்த வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 7 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டன. இதில் அதிமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக்கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்றவற்றுக்கு ஒரு இடம்கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் அக்கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் வேல்முருகன் கேட்டிருந்த 3 தொகுதிகளில் டம்மி வேட்பாளர்கள் போடப்பட்டுள்ளனர். ஆகையால் வேல்முருகன் கட்சிக்கு அதிகபட்சம் 3 தொகுதிகளுக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பேசிய வேல்முருகன், அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி நடைபெற்றது என்பதை விவரித்தார். அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று பேச்சுவார்த்தைக் குழுவிடம் வலியுறுத்தியதையும் முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக அக்குழு கூறியதையும் வேல்முருகன் சுட்டிக்காட்டினார்.
இப்படி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது; பேச்சுவார்த்தைக்கான கதவை அதிமுக சாத்திவிட்டது; நாங்கள் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்; பல அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறார்கள்; கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி இறுதி முடிவெடுக்கும் என்று கூறிய அவர், அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பதை எழுதித் தருமாறு நிர்வாகிகளிடம் கேட்டார். அதாவது அதிமுக கூட்டணியில் நீடிப்பதா? தனித்துப் போட்டியா? திமுக கூட்டணிக்கு போவதா? என்பது தொடர்பான நிர்வாகிகளின் கருத்துகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுங்கள் என்றும் அதன்பின்னர் நல்ல முடிவை எடுப்போம் என்றும் வேல்முருகன் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், அதிமுகவுடனான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீடிக்கிறதா? இல்லையா? என்பதை அதிமுகதான் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால் என்ன காரணங்களுக்காக இடம்பெறவில்லை என்பதையும் அதிமுகதான் கூற வேண்டும்.
கடைசியாக நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது அதிமுக அமைச்சர்கள் குழு கேட்டுக் கொண்டதற்கேற்ப ஒரு வேண்டுகோள் கடிதம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கடிதம் முதல்வர் பார்வைக்கு சென்றதா? இல்லையா? என்பது தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் ஜாதிய ரீதியாக கட்சியை நான் நடத்தவில்லை; தமிழர் வாழ்வுரிமை சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்துதான் கட்சியை நடத்தி வருகிறேன்.
திமுக கூட்டணியில் இருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றனர். அதிமுக கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது எந்த ஒரு கட்சியிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணிக்கு விசுவாசமாகத்தான் நாங்கள் இருந்தோம்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications