அன்னிய நாடுகளின் ஊருவல் சவால்களை வெல்வோம்: தென்பிராந்திய ராணுவ தளபதி ஜக்பீர்சிங்
சென்னை: அன்னிய நாடுகளின் ஊருவல் சவால்களை வெல்வோம் என்று தென்பிராந்திய ராணுவ தளபதி ஜக்பீர்சிங் தெரிவித்துள்ளார்.
கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுகளும் கார்கில் வெற்றி நாளான ஜூலை 26 அன்று அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 15 ஆவது கார்கில் வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதில் சென்னையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தென்பிராந்திய ராணுவ தளபதியான ஜக்பீர் சிங் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின் போது பேசிய தென்பிராந்திய ராணுவத் தளபதி ஜக்பீர் சிங், கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றது. இப்போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் உயிர்த்தியாகத்தை போற்றும் வகையிலும், வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஊடுருவல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தகைய சவால்கள் வந்தாலும் இந்திய வீரர்கள் எதிர்த்து நின்று வெற்றியை நமக்கு உரியதாக்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications