ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிப்போம்.. எல்லோரும் சிறை செல்வார்கள்.. ஸ்டாலின் அதிரடி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இதில் அவ்வப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜெயலலிதாவிற்கு சரியான மருத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து வெளியாகும் தகவல்களால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் இதுகுறித்து மக்களிடம் பேசினார்.
அதில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும். நாங்கள் இந்த வழக்கை முறையாக விசாரிப்போம். ஜெயலலிதாவின் மறைவுக்கு காரணமானவர்கள் சிறை செல்வார்கள்.
யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவரது மரணத்திற்கு யார் காரணம் என்று இதுவரை தெரியாமல் சர்ச்சையாக உள்ளது. இந்த சந்தேகங்கள் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பின் களையப்படும்.
கஜா புயலில் இன்னும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கி விட்டதாக கூறினார். ஆனால் அது உண்மையில்லை. அமைச்சர்கள் பொய் சொல்கின்றனர்.
அதிமுக கட்சி பாஜகவின் அடிமையாக இருந்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த அடிமையான அதிமுகவுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும், என்று ஸ்டாலின் பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications