ஒரு வேளை தினகரன் பாகிஸ்தான் மக்களை கூறுகிறாரோ? நக்கலடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்த காலத்திலும் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்த காலத்திலும் சேர்க்க மாட்டோம்-வீடியோ

    சென்னை: தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்த காலத்திலும் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தகுதிநீக்கப்பட்ட 18 பேரை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும்.

    தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்தக் காலத்திலும் கட்சியில் சேர்க்கமாட்டோம். மாற்றான் தோட்டமாக இருந்தாலும் மதிக்கும் பண்பை பெற்றவர்கள் நாங்கள்.

    விமர்சனம் செய்யக்கூடாது

    விமர்சனம் செய்யக்கூடாது

    18 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்க வழக்கில் கோர்ட் தீர்ப்பை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. ஆனால் கருத்து கூறலாம். இதில், தலைமை நீதிபதியின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    நிச்சயம் வீழும்

    நிச்சயம் வீழும்

    துரோகங்கள் வென்றதாக சரித்திரம் இல்லை. துரோகம் வீழ்ந்ததாக தான் சரித்திரம் உண்டு. அதனால் துரோகம் நிச்சயம் வீழும் என்ற நம்பிக்கை உள்ளது.

    உண்மைக்கு மாறாக

    உண்மைக்கு மாறாக

    அதிமுக அரசின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் உண்மைக்கு மாறாக தினகரன் பேசி வருகிறார்.

    பாகிஸ்தான் மக்களா?

    பாகிஸ்தான் மக்களா?

    மக்கள் வருத்தப்படுவதாக கூறுகிறார். ஒருவேளை அவர் பாகிஸ்தான் மக்களை கூறுகிறாரோ என்னவோ? இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+